“ திருநெல்வேலி வருகிறேன். 4 நாட்கள் இருப்பேன்.” என வீராகவனுக்கு ஆவுடையக்கா எழுதியிருந்தார். எனக்கு உள்ளூற ஒரு எரிச்சல்தான். எனக்கு எழுதவில்லை…
சனிக்கிழமை காலையில் பஸ்பிடித்துப் போனால், அக்கா எங்களைப் பார்த்து வியப்பாள் என நினைத்து ஏமாந்தோம். “ வாங்கடா. மத்தியான வேளை. முதல்ல சாப்பிடுங்க” என்றாள். “ எப்படியும் நீங்க ரெண்டுபேரும் இங்க வரக் கிளம்புவீங்கன்னு தெரியும். அதுவும் இன்னிக்கு லீவு. அரைமணி நேரம் இருங்க. சோறு ஆக்கிடறேன்”
அது அவரது பெரியம்மா வீடு என்பதால், தயங்க, அவர் எங்களுடன் பஸ் ஸ்டாண்டு பக்கம் ஓட்டலில் சாப்பிட வந்தார். ஃபுல் மீல்ஸ் என டோக்கன் அவரே வாங்கினார். “நான் சம்பாதிக்கிறேன். நீங்க ரெண்டுபேரும் வேலைக்குப்போய் பிறகு எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்க, என்ன?”
அக்காவை இம்ப்ரெஸ் செய்ய நினைத்து, புரட்சிகரமாகப் பேசத் தொடங்கி அரைகுறை கம்யூனிஸம், சோசலிசம் ( பக்கத்தில்தான் NCBH தள்ளுபடியில் சோசலிசம் என்றால் என்ன? ரூ 2 க்கு விற்றுக் கொண்டிருந்தது ) என உளற, அவர் மவுனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்பொழுதெல்லாம் புரட்சி சிந்தை என்பது இந்துக்கள் இந்துக்களை திட்டுவது, ஏளனம் செய்வது என்பதை முக்கிய அம்சமாகக் கொண்டது. அதுவும் பிராமணர்கள் பிராமணர்களைத் திட்டுவது மிக முக்கியம்.
“பாலசந்தர் அருமையான டைரக்டர் “ என்றேன். “ பழைய படம் பாருங்க அரங்கேற்றம் னு ஒண்ணு. அதுல ஒரு ப்ராமின் கேர்ல்…”

அக்கா போறும் என்பதாகத் தடுத்தாள் “ இது ஓட்டல். கத்திப் பேசக்கூடாது. அப்புறம் வேறென்ன படம் பார்த்த?
“ம்…. மன்மதலீலை?” சொன்னாள் அடிப்பாளோ? டீசண்ட்டாக “ நிழல் நிஜமாகிறது “ என்றேன். அந்த கமல் கம்யூனிஸ்ட் நடிப்பு நல்லா இருந்துச்சு. கம்பன் ஏ…மா..ந்தா…ன்”
அக்கா நேராகப் பார்த்தாள் “ அதுல இருக்கற பெரிய போலித்தனம் தெரியலை உனக்கு? அந்த கேரக்டர் பெண்களை மதிக்கிற கம்யூனிஸ்ட் , ஷோபா கடைசியில அனுமந்துவுடன் வாழப்போவதாகச் சொல்கையில்,கமல் கை தட்டுவார். ஆனால் கம்பன் ஏமாந்தான் பாட்டுல “ ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே? ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?” ன்னு பாடுவார். இது முரணாப் படலை உனக்கு?”

விழித்தேன் “ அக்கா, அது ஒரு காதல் பாட்டு. He is just teasing her”
“டீஸ் பண்றதுக்கும் சொல்லற வார்த்தைகள் மோசம்டா. பெண்ணுரிமை பத்திப்பேசற ஒருத்தன் எப்படி அதை மிதிக்கற மாதிரி காதல் செய்வான்?”
அப்ப கமல் போலி?
“ அந்த கேரக்டர் போலி. டைரக்ஷன்ல பெரிய ஓட்டை. பாலச்சந்தர்னா உடனே தூக்கி வைக்க்கூடாது. எது நல்லதோ அதை பாராட்டணும். எதுல சறுக்கியிருக்காரோ, அதைச் சொல்லணும்”
Objective criticism என்பதை சற்று விளக்கினார் . “ இதை கணியன் பூங்குன்றனார் சொல்லுவார் “ பெரியோரென வியத்தலும் இலமே; சிறியோரென இகழ்தல் அதனிலும் இலமே”
அக்கா தொடர்ந்தாள் “ இந்த புரட்சி சிந்தனைன்னு காட்டிக்கறது பெரிய போலித்தனம். அந்த அரங்ககேற்றம் படம் இருக்கே, அதுல ஏன் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் காட்டறான்? ஏன்னா அப்படிக் காட்டினாத்தான் “ அடேயப்பா! என்ன ஒரு துணிச்சல் இந்த டைரக்டருக்கு?” ந்னு ஒரு பாராட்டு வரும்னு அவங்க நினைப்பு. இதையே ஒரு மாற்று சமுதாயம், மாற்று மதக் கேரக்டராக் காட்டச் சொல்லேன். மாட்டாங்க. “
வியந்து கேட்டிருந்தேன். அக்கா தொடர்ந்தாள் “ நான் அந்த ஜாதி இல்ல. ஆனா எனக்கு இப்படி போலித்தனமா காட்டறது எதுக்குன்னு விளங்குது. இப்ப ஒரு ஜாதியைச் சொன்னவன் மனசுல அப்படித்தான மத்த ஜாதிப் பொண்களைப் பத்தி விரசமான எண்ணம் இருக்கும்?.
பாலச்சந்தர் படமா? எதிர் நீச்சல், இரு கோடுகள் பாரு. ஸ்ரீதர் படமா? மீனவ நண்பனை விட்டுறு. கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை பாரு.”
“அப்ப சிவாஜி படம்? பட்டிகாடா பட்டணமா ? பாத்திருக்கீங்களாக்கா? “ நல்வாழ்த்து நான் சொல்லுவேன்”னு ஒரு பாட்டு வரும். அதுல பெண்கள் அடிமைத்தனம் பத்தி ஒரு வரி “கோபம் கொண்டு உதைத்தாலும், கொண்டவனை மறக்காதே”. இதை என்ன சொல்றீங்க?”
“அடேய்” என்றாள் அக்கா பொறுமையாக “ அந்தப் படம் பின்னணியுமே அப்படி. சிவாஜி ஒரு பட்டிக்காட்டு ஆணாதிக்க சமூக வளர்ப்பு ஆளாக் காட்டியிருப்பாங்க. படிச்ச, சிகரெட் ஊதற, கோலத்தை ஸ்கூட்டரால் அழிக்கிற கம்யூனிஸ்ட்டா இல்ல. அந்தப் பாட்டுல ஒரு வரி வரும் “ யாரிடம் குறையில்லை, யாரிடம் தவறில்லை, வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை, வா” எவ்வளவு பாஸிட்டிவான வரி! கம்பன் ஏமாந்தான்ல காட்டு பாப்போம். பாட்டு மெட்டு நல்லா இருக்கும். அதோட நிறுத்திக்கணும். அவர் பெரிய டைரக்டர்னு , சொன்னதையெல்லாம் மனசுல போட்டுக்கக் கூடாது
சினிமா, நடிகர்கள், டைரக்டர்கள், சிந்தனையாளர்கள் பற்றி ஒரு தெளிவு வந்தது அப்பொழுதுதான். இனி ரசிப்போம். ஆனால், சிந்தனைகளை வாங்கி நிறைப்பதில்லை, அது இலவசமாகக் கிடைத்தாலும்.
அடுத்த வாரம் “ இன்னிக்கு ஜீவாவின் சிந்தனைகள் பத்தின கூட்டம் இருக்கு வர்றியா? “ என்ற அழைப்பிற்கு “ இல்லை “ என்றேன்.
மிகவும் அருமையான விளக்கம். உண்மையே. நாம் சிலவற்றை ரசிக்கலாம், சிலரை அவர்களின் திறமைகளுக்காகப் போற்றலாம். ஆனால், எதையும் நேரடியாக அப்படியே உள் வாங்கி அவர்கள் திணிக்கும் கருத்துக்களை ஆராயாமல் அப்படியே ஏற்று நம் சுய சிந்தனைகளை மழுங்கடித்துக் கொள்ளக் கூடாது. “செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” என்னும் கணக்காக பாலச்சந்தர் என்பதற்காகவே ஆஹா ஓஹோ என்று கொண்டாட வேண்டும் என்பதில்லை. காந்தி என்றாலே மஹாத்மா என்பது போல இங்கு பிம்பங்கள் எளிதாகக் கட்டமைக்கப் படுகின்றன யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அப்படிப்பட்ட பிரபலங்களும் சறுக்கிய தருணங்கள் பல உண்டு. இது போன்ற தெளிவான உயர்வான சிந்தனை உடைய வர்களின் தொடர்பு கிட்டத் தாங்கள் பாக்கியம் செய்திருக்கிறீர்கள். உங்கள் ஆவுடை அக்காவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙇🏻
LikeLike
மிகவும் அருமையான விளக்கம். உண்மையே. நாம் சிலவற்றை ரசிக்கலாம், சிலரை அவர்களின் திறமைகளுக்காகப் போற்றலாம். ஆனால், எதையும் நேரடியாக அப்படியே உள் வாங்கி அவர்கள் திணிக்கும் கருத்துக்களை ஆராயாமல் அப்படியே ஏற்று நம் சுய சிந்தனைகளை மழுங்கடித்துக் கொள்ளக் கூடாது. “செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” என்னும் கணக்காக பாலச்சந்தர் என்பதற்காகவே ஆஹா ஓஹோ என்று கொண்டாட வேண்டும் என்பதில்லை. காந்தி என்றாலே மஹாத்மா என்பது போல இங்கு பிம்பங்கள் எளிதாகக் கட்டமைக்கப் படுகின்றன யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அப்படிப்பட்ட பிரபலங்களும் சறுக்கிய தருணங்கள் பல உண்டு. இது போன்ற தெளிவான உயர்வான சிந்தனை உடைய வர்களின் தொடர்பு கிட்டத் தாங்கள் பாக்கியம் செய்திருக்கிறீர்கள். உங்கள் ஆவுடை அக்காவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙇🏻
LikeLiked by 1 person
மிக்க நன்றி சாஸ்தா ராஜகோபால். ஒரு போலித்தனம் 60களிலிருந்து இன்று வரை தொடர்கிறது. புரியாத, அல்லது நம்மைப் பழிக்கிற கதையாக இருந்தால், மேல்தட்டு ரசிகர்கள் அருமை என்று ரசித்துவைப்பார்கள். அது அவர்களுக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும். Living upto the Joneses. அது T M Krishna பாடலாக இருந்தாலும் ” அவன் என்னவா இருந்தா என்ன? நன்னா பாடறான்” என்பதான மனப்பிறழ்வு.
LikeLike
மிகவும் அருமையான விளக்கம். உண்மையே. நாம் சிலவற்றை ரசிக்கலாம், சிலரை அவர்களின் திறமைகளுக்காகப் போற்றலாம். ஆனால், எதையும் நேரடியாக அப்படியே உள் வாங்கி அவர்கள் திணிக்கும் கருத்துக்களை ஆராயாமல் ஏற்று நம் சுய சிந்தனைகளை மழுங்கடித்துக் கொள்ளக் கூடாது. “செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” என்னும் கணக்காக பாலச்சந்தர் என்பதற்காகவே ஆஹா ஓஹோ என்று கொண்டாட வேண்டும் என்பதில்லை. காந்தி என்றாலே மஹாத்மா என்பது போல இங்கு பிம்பங்கள் எளிதாகக் கட்டமைக்கப் படுகின்றன. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அப்படிப்பட்ட பிரபலங்களும் சறுக்கிய தருணங்கள் பல உண்டு. இது போன்ற தெளிவான உயர்வான சிந்தனை உடைய வர்களின் தொடர்பு கிட்டத் தாங்கள் பாக்கியம் செய்திருக்கிறீர்கள். உங்கள் ஆவுடை அக்காவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙇🏻
LikeLike