தங்கள் அறிவியல் புனைவுகளை ஆர்வத்துடன் சில இளைய எழுத்தாளர்கள் வரைவு வடிவில் அனுப்பியிருக்கிறார்கள். 2021 சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் புத்தக வடிவில் கொண்டுவர அவர்களது அவசரம் புரிகிறது.
அறிவியல் புனைவு எழுதுவதில் உள்ள சிரமங்கள் அறிவேன். கதையும் சரியான நேரத்தில் வெளிவரவேண்டும். அதே நேரம் கதை சரியாகவும் இருக்கவேண்டும். அவசரத்தில் கதை பிறழ்ந்துவிடும் அபாயம் உண்டு.
தொழில்நுட்பத்தில் வேறுபாடு இருந்தால், கற்பனை என்று சொல்லிவிடலாம். “வீட்டு வாசலில் ராக்கெட் காப்ஸ்யூல் வந்து நின்றது” இப்படி நாளை இருக்குமென்று சொல்வதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், மூன்றே நாட்களில் ஒரு மீன் பரிணாம வளர்ச்சியில் முதலையானது என்பதில் சிக்கல் இருக்கிறது.
புரிந்துகொண்டவர்கள் நண்பர்களாகத் தொடர்கிறார்கள். சிலர் நட்பை முறித்துக் கொண்டுவிடுகிறார்கள். தருக்கம், அறிவியலோடு அமைதியாக இதெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.
“மூன்றே நாட்களில் ஒரு மீன் பரிணாம வளர்ச்சியில் முதலையானது என்பதில் சிக்கல் இருக்கிறது.”
உங்கள் ஒப்பீடுகள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நான்கு பக்கங்கள் எழுதியும் புரியவைக்க முடியாததை நான்கு வார்த்தைகள் நச்சென்று பதியவைக்கின்றன.
LikeLike
Math Tales, மிக்க் நன்றி.
LikeLike